ஏப்ரல் மாதத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை எவ்வளவு தெரியுமா?

புது ஜெனரேசன் அமேஸ் மற்றும் WR-V ஆகிய கார்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

View Photos
இனி வரும் மாதங்கள் கார்கள் விற்பனைக்கு சவாலாக இருக்கும்

இந்தியாவில் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா நிறுவனமாகும். 2019 ஏப்ரல் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 11,272 கார்கள் விற்பனை செய்துள்ளது. இது, ஏப்ரல் 2018 உடன் ஒப்பிடும் போது 23 சதவிகிதம் உயர்வாகும்.

ஏப்ரல் 2018 யில் 9,143 கார்கள் மட்டுமே விற்பனை செய்தது ஹோண்டா. மேலும் ஏப்ரல் 2019 யில் 220 கார்களை ஏற்றுமதி செய்தது ஹோண்டா. புது ஜெனரேசன் அமேஸ் மற்றும் WR-V ஆகிய கார்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

new 2018 honda amaze

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் கார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் விற்பனை பிரிவு இயக்குநர் ராஜேஷ் கொயல் கூறுகையில், ‘இந்த மாதம் நல்ல விற்பனைக்கு முக்கிய காரணம் அமேஸ் காராகும். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமேஸ் கார் சந்தையில் இல்லை. மேலும் இனி வரும் மாதங்களில் கார்களின் விற்பனை அதிக அளவு பாதிக்கப்படும். தேர்தல், எரிபொருள் விலை ஏற்றம், BS 6 கட்டுபாடுகள் முதலியவை கார்களின் விற்பனைக்கு சவாலாக அமையும்' என்றார்.

0 Comments

2019 யில் இந்தியாவில் புது கார்களை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. 2018 யில் இருந்து மூன்று ஆண்டுகளில் ஆறு புது கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹோண்டா அறிவித்திருந்தது. இதுவரை புது ஜெனரேசன் கார்களான அமேஸ், சிஆர்-வி , சிவிக் ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.