இரட்டை இலக்க வீழ்ச்சியில் மாருதி சூசுகி - முழு விவரங்கள் உள்ளே

குறைவான கார்களே தேவையிருப்பதால் மாருதி சூசுகி நிறுவனமானது தனது தயாரிப்பு ஆலையை ஏழு நாட்கள் திறக்கவில்லை.

View Photos
வளர்ச்சியை பதிவு செய்த ஒரே கார் சியஸ் மிட் செடான் ஆகும்

Highlights

  • இந்த பொருளாதார ஆண்டு துவக்கத்தில் இருந்தே கார் விற்பனை குறைவாக உள்ளது
  • மினி மாடல் பிரிவானது 36.2 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது
  • ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட கார் விற்பனையானது குறைவாகவே இருந்தது

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கார் விற்பனை மிக குறைவாகவே உள்ளது. இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சூசுகி நிறுவனம் கூட ஜூன் 2019 யில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஜூன் 2018 யில் 1,34,036 யூனிட்களை விற்ற மாருதி சூசுகி நிறுவனத்தால் ஜூன் 2019 யில் 1,11,014 யூனிட்களை மட்டுமே விற்க முடிந்தது. இது 17.2 சதவிகிதம் வீழ்ச்சியாகும்.

கார்

new maruti suzuki showroom designThe compact car and utility vehicle segment also recorded negative growth leading to double-digit decline in sales.

ஆல்டோ, வாகன் ஆர் கார்கள் உள்ளடக்கிய மினி மாடல் பிரிவானது ஜூன் 2018 யில் 29,381 யூனிட்களையும் ஜூன் 2019 யில் 18.733 யூனிட்களை விற்றுள்ளது. இது 36.2 சதவிகிதம் வீழ்ச்சியாகும்.

டிசையர், சுவிப்ட், பலேனோ, புது வாகன் ஆர் உள்ளடக்கிய காம்பேக்ட் பிரிவில் ஜூன் 2018 யில் 71,570 யூனிட்கள் விற்றன. ஜூன் 2019 யில் அது 62,897 யாக குறைந்து 12.1 சதவிகித வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

விட்டாரா பிரிஸா, எர்ட்டிகா கார்களை பெற்றுள்ள யூட்டிலிட்டி வாகன் பிரிவானது 7.9 சதவிகித வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜூன் 2018 யில் 19.321 யூனிட்களையும் ஜூன் 2019 யில் 17,797 யூனிட்களையும் இது விற்றுள்ளது.

maruti suzuki plant manesar file Maruti Suzuki had shut down its manufacturing plant for seven days in June 2019.

வளர்ச்சியை பதிவு செய்த ஒரே கார் சியஸ் மிட் செடான் ஆகும். ஜூன் 2018 யில் 1579 யூனிட்கள் விற்ற இது, ஜூன் 2019 யில் 2322 யூனிட்கள் விற்று 47.1 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

0 Comments

இந்த பொருளாதார ஆண்டு துவக்கத்தில் இருந்தே கார் விற்பனையானது குறைவாகவே இருந்துள்ளது. மேலும் மார்கெட் வல்லுநர்கள் லோக்சபா தேர்தல் நேரத்தால் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட கார் விற்பனையானது குறைவாகவே இருக்கும் என கணித்திருந்தனர். குறைவான கார்களே தேவையிருப்பதால் மாருதி சூசுகி நிறுவனமானது தனது தயாரிப்பு ஆலையை ஏழு நாட்கள் திறக்கவில்லை.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Maruti Suzuki S-Presso with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.