கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் விற்பனையான கார்களுடன் ஒப்பிடும்போது இந்த ஜனவரியில் டாடா மோட்டார்ஸ் கார்களின் விற்பனை 12 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.
டாடா மோட்டார்சுடன் ஜகுவார் லேண்ட் ரோயர் கார்களின் விற்பனையும் குறைந்திருக்கிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தாண்டு ஜனவரி மாதத்தில் பல்வேறு பிராண்ட் கார்களின் விற்பனை பின்னடைவை சந்தித்துள்ளன. நடப்பாண்டில் சர்வதேச அளவில் 59, 686 கார்கள் கடந்த ஆண்டு ஜனவரியில் விற்பனையானதை விட குறைந்திருக்கின்றன.
இதேபோன்று ஜாகுவாரை பொறுத்தளவில் 12,904 கார்களும், லேண்ட் ரோயரை பொறுத்தளவில் 28,772 கார்களும் மொத்த விற்பனையில் குறைந்துள்ளன.
ரீடெய்லை பொறுத்தளவில் வட அமெரிக்காவில் கார்களின் விற்பனை 13.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் சீனாவில் 39.8 சதவீதம் அளவுக்கு கார்களின் விற்பனை ரீடெய்லில் சரிந்திருக்கின்றன. ஐரோப்பாவிலும் இதே நிலைமை நீடிக்கிறது.
அங்கு பொருளாதார சிக்கல் மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக விற்பனை 5.2 சதவீதம் சரிந்துள்ளது.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.