Yamaha FZ, FZ-S: BS 6 க்கு மாற்றப்பட்ட பைக்குகளின் விவரங்கள் வெளியாகின

FZ பைக்கானது தற்போது 98,680 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிஎஸ் 6 பதிப்பு வரும்போது சுமார் 10-15 சதவீதம் விலை உயர்வு இருக்க கூடும்

View Photos
2020 Yamaha FZ V3.0: இந்த பைக்கில் அதே 149 சிசி இன்ஜின் உபயோகிக்கப்படும்

யமஹா மோட்டார் இந்தியா (Yamaha Motor India) இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரத் ஸ்டேஜ் 6 (BS 6) ஏற்ற இரு சக்கர வாகனங்களை 2019 நவம்பருக்குள் வெளியிடும் என்று அறிவித்தது. அதற்கு ஏற்ப FZ மற்றும் FZ-S மோட்டார் சைக்கிள்களின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளில் விவரங்கள் கசிந்துள்ளன. 149 சிசி ஒற்றை சிலிண்டர் இன்ஜினிலிருந்து வரும் சக்தியுடன் புதுப்பிக்கப்பட்ட FZ மற்றும் FZ-S மாடல்களில் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் பவரில் சிறு மாற்றம் உள்ளது. தற்போதைய 13.1 bhp க்கு பதிலாக 12.2 bhp மட்டுமே வெளியிடப்படும். தற்போதைய மாடலில் 8000 RPM க்கு மாறாக 7250 RPM இருக்கும்.

இப்போதைக்கு பவர் மாற்றத்தை குறித்த விவரங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆனால் இதில் டார்க் குறித்தான விவரங்களும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 யமஹா FZ FI 6000 RPM யில் 12.8 Nm உட்ச டார்க்கை உருவாக்குகிறது. செயல்திறனைக் குறைப்பு என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும், இதனை இனி பல இருசக்கர வாகனங்களில் எதிர்பார்க்கலாம். உற்பத்தியாளர்கள் வாகனத்தில் அதிக உபகரணங்களைச் சேர்ப்பது மூலம் புதிய விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய பார்ப்பார்கள்.

vd0h2q7c

இந்த பைக்கானது BS 6 க்கு மாற்றப்பட்டுள்ளது

சக்திவாய்ந்த பதிப்பை விரும்பும் FZ ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமையும். இரண்டாம் தலைமுறை FZ மாடல் 2014 இல் உருவானதிலிருந்து பவர் புள்ளிவிவரங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. 2008 யில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல், 13.8 bhp மற்றும் 13.6 Nm உட்ச டார்க்கை தந்தது. இது 155 சிசி ஒற்றை சிலிண்டர் கார்பூரேட்டட் மோட்டார் பெற்றிருந்தது

பிஎஸ் 6 விதிமுறைகளைக்கு ஏற்ப மாற்ற புதிய உபகரணங்களைத் தவிர்த்து, 2020 FZ மற்றும் FZ-S மோட்டார் சைக்கிள்களில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. FZ V3.0 பைக்கில் இந்த ஆண்டு ஜனவரியில் புதிய எல்.ஈ.டி ஹெட்லேம்ப், திருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புதிய ஸ்டெப்-அப் ஸ்டைல் ​​ஒற்றை இருக்கை, புதிய வெளியேற்ற மஃப்ளர் உள்ளிட்ட மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. FZ  பைக்கானது தற்போது 98,680 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிஎஸ் 6 பதிப்பு வரும்போது சுமார் 10-15 சதவீதம் விலை உயர்வு இருக்க கூடும்.

0 Comments

Source: IndianAutosBlog.com

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.