புதிய மாற்றங்களுடன் 2019 பி.எம்.டபிள்யூ S 1000 சீரிஸ் பைக்குகள்

பி.எம்.டபிள்யூ S 1000RR, பி.எம்.டபிள்யூ S 1000R மற்றும் பி.எம்.டபிள்யூ S 1000XR பைக்குகள் பல மாற்றங்களைப் பெறுகின்றன

View Photos

பி.எம்.டபிள்யூ மோட்டோராடின் S 1000 சீரிஸ் பைக்குகளில் 2019-ம் ஆண்டுக்கான புதிய அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பி.எம்.டபிள்யூ S 1000RR, பி.எம்.டபிள்யூ S 1000R மற்றும் பி.எம்.டபிள்யூ S 1000XR பைக்குகள் பல மாற்றங்களைப் பெறுகின்றன.

லிட்டர் கிளாஸ் ஸ்டிரீட் ஃபைட்டர் மாடலான பி.எம்.டபிள்யூ S 1000R சூப்பர் பைக்குக்கு, புதிதாக இரண்டு கலர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராம் மெட்டாலிக் பிளாக், வெள்ளை, நீலம் மாற்றும் சிவப்பு காம்போ கலர் மாடலிலும் வருகிறது. தற்போது உள்ள கிரே மற்றும் வெள்ளை, லூப்பைன் நீலம் மற்றும் ரேஸிங் சிவப்பு நிறங்கள் உலகம் முழுவதும் நிறுத்தப்படுகிறது.

bmw s 1000 xr

தொலை தூர பயண ஸ்போர்ட் மாடலான, பி.எம்.டபிள்யூ S 1000XR பைக்கிலும் கலர் மாற்றங்கள் இருக்கின்றன. புதிதாக ஸ்டிராம் மெட்டாலிக் பிளாக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. ஹேண்டில் பார்களும், கருப்பு நிறத்தை பெற்றிருக்கிறது. ‘டிரிபிள் பிளாக்’ என்ற எழுத்தும் பைக்கில் எழுதப்பட்டுள்ளது. தற்போதைய மாடலில் உள்ள ஓசன் புளூ மெட்டாலிக் மேட் கலர் S 1000XR பைக்குக்கு நிறுத்தப்படுகிறது.

S 1000RR மாடலில் புதிதாக ஹெச்.பி பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த லித்தியம் ஐயான் பேட்ட்ரிகள் நீண்ட ஆயுள் கொண்டதாக இருக்கும். இந்த புதிய பேட்டரியால், பைக்கின் எடை 2 கிலோ குறைகிறது. இந்த பைக்கில் இருக்கும் இன்டெக்ரேட்டட் எலக்ட்ரானிக் சிஸ்டம், அதிகமாக சார்ஜாகாமல் இருப்பதை தடுக்கிறது.

0 Comments

S 1000 சீரிஸ் பைக்குகள் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.