New Cars and Bikes in India

ரூ. 46.60 லட்சத்தில் எம்டபிள்யூ 3 சீரிஸ் கிராண் டூரிஸ்மோ ஸ்போர்ட் கார் !

பிஎம்டபிள்யூ இந்தியா தனது 3 சீரிஸ் கிராண் டூரிஸ்மோ ஸ்போர்ட் காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

View Photos

பிஎம்டபிள்யூ இந்தியா தனது 3 சீரிஸ் கிராண் டூரிஸ்மோ ஸ்போர்ட் காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய மார்க்கெட்டில் இந்த காரின் விலை ரூ.46.60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினில் அதிவேகத்திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. கிராண் டூரிஸ்மோ கார்கள் அதிவேகத்திறனும், சொகுசும் கொண்டதாக, வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் டாப் எண்ட் வெரைட்டி ஸ்போர்ட் மாடல், ரூபாய் 51.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் எல்இடி விளக்குகள், 10.5 இன்ச் டிஸ்பிளே ஆடியோ இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், மர வேலைப்பாடுகள் கொண்ட இண்டீரியர்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

18 இன்ச் அலாய் வீல், மெட்டலிக் கலரில் இந்த கார் வெளியாகியுள்ளது. இந்த காரின் இன்ஜின் 1995 சிசி கொண்டதாகவும், 190 பிஎச்பி திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

2500 ஆர்பிஎம்மில் 400 Nm டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 ஸ்பீட் ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஸன் கியர் பாக்ஸ் கொண்ட இந்த கார், 0 – 100 கிமீ வேகத்தை 7.7 நொடிகள் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிராண் டூரிஸ்மோ காரில் கம்போர்ட், எக்கோப்ரோ, ஸ்போர்ட், ஸ்போர்ட் ப்ளஸ் என நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.