யமஹா எம்.டி. -15 இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ. 1.36 லட்சமாக நிர்ணயம்!

புதிய யமஹா எம்.டி. 15-ல் 155 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆர்.டி. 15-ல் உள்ளதைப் போன்று உள்ளது.

View Photos
யமஹா நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மோடோபுமி ஷிதாரா, ரவிந்தர் சிங் உள்ளிட்டோர் யமஹா எம்.டி. 15-யை அறிமுகம் செய்யும் காட்சி.

யமஹா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான யமஹா எம்.டி. 15 பைக் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 1.36 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை டெல்லிக்கு மட்டுமே பொருந்தும்.

மற்ற நகரங்களில் சற்று விலை அதிகமாக இருக்கும். கேடிஎம் 125 டியூக், டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 ஆகிய பைக்குகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் யமஹா எம்.டி. 15 பைக் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே யமஹா பைக் ஆர் சீரிஸ், எஃப். ஸெட் சீரிஸ் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது எம்.டி. சீரிஸ் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து 

v6l7dli

டார்க் மேட் ப்ளூ மற்றும் மெடாலிக் ப்ளாக் ஆகிய 2 கலர்களில் எம்.டி. 15 கிடைக்கிறது.

யமஹா மோட்டார் இந்தியாவின் சேர்மன் மோடோபுமி ஷிதாரா கூறுகையில், ''புதிய ட்ரெண்டுகளுக்கு ஏற்பட எம்.டி. 15-யை இந்திய சந்தையில் அறிமுகம்  செய்துள்ளோம். ரைடர்க்ள வேகத்தையும் கட்டுப்பாட்டையும் அனுபவிக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் இந்த பைக்குகள் சந்தைப் படுத்தப்பட்டுள்ளன. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அத்தகைய ஸ்டைல், எதிர்பார்ப்பு, ஸ்போர்ட்டிவ் தோற்றம் உள்ளிட்டவை இதில் இருக்கின்றன.'' என்றார். 

டார்க் மேட் ப்ளூ மற்றும் மெடாலிக் ப்ளாக் ஆகிய 2 கலர்களில் எம்.டி. 15 கிடைக்கிறது. மோனோ ஷாக் சஸ்பென்ஷன், 282 எம்.எம். முன்பக்க டிஸ்க் பிரேக், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். யூனிட் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன.

0 Comments

பவரைப் பொறுத்தளவில் 155 சிசி இஞ்சின் இதில் இருக்கிறது. இது 19 பி.எச்.பி.  மற்றும் 14.7 எம்.எம். பீக் டார்க்கை வெளிப்படுத்துகிறது. 6 கியர்கள் வேகத்திற்கு உதவுகின்றன. 
 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.