இந்தியாவின் டாப் 10 ஸ்கூட்டர்கள்: புகைப்படங்கள், விலை, மைலேஜ் தொகுப்பு

பெண்கள் மட்டுமின்றி இப்போது இளைஞர்களும் ஸ்கூட்டர்களை விரும்புவதால், நிறுவனங்கள் புதுபுது தயாரிப்புகளுடன் களம் இறங்கியுள்ளன

View Photos

Highlights

  • இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா
  • டிவிஎஸ் ஜூப்பிடர் ஸ்கூட்டர் அதிக வசதிகளைக் கொண்டுள்ளது
  • ஏப்ரில்லா எஸ் ஆர் 150 மாடல் ஸ்கூட்டரின் விலை ரூபாய் 70,374

இந்தியாவின் டூவீலர் மார்க்கெட்டில் ஸ்கூட்டர்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. பெண்கள் மட்டுமின்றி இப்போது இளைஞர்களும் ஸ்கூட்டர்களை விரும்புவதால், நிறுவனங்கள் புதுபுது தயாரிப்புகளுடன் களம் இறங்கியுள்ளன.

இந்தியாவில் இதுவரை 5.6 மில்லியன் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. அந்த வகையில், இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் டாப் 10 ஸ்கூட்டர்களின் விலை, மைலைஜ் குறித்த தொகுப்பு இதோ:

Sr no. Scooter Sales Numbers For FY2017
1 Honda Activa 27,59,835 units*
2 TVS Jupiter 6,13,817 units
3 Hero Maestro Edge 3,78,347 units
4 Suzuki Access 2,65,181 units
5 Yamaha Fascino 2,13,312 units
6 TVS Scooty Zest 110 62,462 units
7 Aprilia SR 150 17,189 units

1. டிவிஎஸ் என்டார்க் 12

tvs ntorq 125 looks stylish sharp and bold

டிவிஎஸ் என்டார்க் 125 மாடல் இந்தியாவில் அறிமுகமானதையடுத்து, மார்க்கெட்டில் டாப் நிலையில் உள்ளது. இது மிகவும் ஸ்டைலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் உள்ளது. 9.3 பிஎச்பி திறனோடு, 125 சிசி இன்ஜின் உள்ளது. இதன் விலை ரூபாய் 58,687 (எக்ஸ் ஷோரூம் - டெல்லி).

2. சுசூகி பர்க்மென் ஸ்டிரீட்

0kggf6

சுசூகி பர்க்மென் ஸ்டிரீட் மாடல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 125சிசி இன்ஜினோடு 8.58 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இதன் விலை 68,000 ரூபாய் (எக்ஸ் ஷோரூம் - டெல்லி).

3. ஹோண்டா கிரேசியா

125 சிசி இன்ஜின் கொண்ட இந்த ஸ்கூட்டர் 8.52 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இதுவும் மிக ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.59,043(எக்ஸ் ஷோரூம் - டெல்லி).

4. டிவிஎஸ் ஜூப்பிடர்

tvs jupiter bs iv

அதிக பர்மார்மென்ஸ் கொண்ட இந்த ஸ்கூட்டரை மத்திய தர வர்க்கத்தினரை குறிவைத்து டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் பல்வேறு வசதிகளை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது. இதன் மைலேஜ் 62 கிலோமீட்டர். இதன் விலை ரூ.49,666(எக்ஸ் ஷோரூம் - டெல்லி).

5. ஹோண்டா ஆக்டிவா

honda activa 4g

இந்திய டூவீலர் சந்தையில், ஹோண்டா ஆக்டிவா அதிகம் விற்பைனையாகி சாதனை படைத்துள்ளது. ஆக்டிவா 4ஜி மாடலில் 109சிசி இன்ஜின் 8 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. ஆக்டிவா ஐ மாடலின் விலை 50,730 ரூபாய் மறும் ஆக்டிவா 4ஜியின் விலை 56,954 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

6. ஹோண்டா மேஸ்டிரியோ எட்ஜ்

hero maestro edge new colours

ஹோண்டா மேஸ்டிரியோ எட்ஜ் மாடல் சிறப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எண்டார்க், ஜூப்பிடர் இரண்டு ஸ்கூட்டர்களின் பவரை இஎதுவும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.50,480(எக்ஸ் ஷோரூம் - டெல்லி).

7. சுசூகி ஆக்ஸஸ்

2017 suzuki access 125 bs iv

சுசூகி நிறுவனத்தின் ஆக்ஸஸ் மாடல் கடந்த ஆண்டு 2.65 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளது. 124 சிசி இன்ஜின் 8.6 பிஎச்பி திறனைக் கொண்டுள்ளது. இதன் விலை 57,615 ரூபாய்(எக்ஸ் ஷோரூம் - டெல்லி).

8. யமாஹா ஃபேஸினோ

yamaha fascino

யமாஹா நிறுவனத்தின் ஃபேஸினோ மாடல் கடந்த ஆண்டு 2.13 லட்சம் விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இதில் 113 சிசி இன்ஜின், 7 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 66 கிலோமீட்டர் மைலேஜ் கொடுப்பதால் இதை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதன் விலை ரூ.54,330(எக்ஸ் ஷோரூம் - டெல்லி).

9. டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்

tvs scooty zest himalayan highs edition

மிகக் குறைந்த எடை , ஓட்டுவதற்கு வசதியான வடிவமைப்பையும் இது கொண்டுள்ளது. லிட்டருக்கு 62 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 46,538 ரூபாய்(எக்ஸ் ஷோரூம் - டெல்லி).

10. ஏப்ரில்லா எஸ் ஆர் 150

aprilia sr 150
0 Comments

ஏப்ரில்லா எஸ் ஆர் 150 ப்ரீமியம் ஸ்டைல் வண்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வண்டிகளை விட இது மிகவும் ஸ்டைலானது. இதன் 154.8 சிசி இன்ஜின் 10.25 பிஎச்பி திறனைக் கொண்டுள்ளது. இதன் விலை 70,374 ரூபாய்(எக்ஸ் ஷோரூம் - டெல்லி).

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.