2 மாதங்களில் 50,000 புக்கிங் பெற்று அசத்தும் ஹூண்டாய் வென்யூ கார்...!

மே 21 அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் இதுவரை 18,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

View Photos

Highlights

  • விட்டாரா பிரிஸா காருக்கும் வென்யூ காருக்கு இடையே வித்தியாசம் 108 மட்டுமே
  • இந்தியாவின் எஸ்யூவி மார்கெட்டில் 21 சதவிகிதம் ஹூண்டாய் வசமானது
  • மஹிந்திரா XUV300 யை விட 3,994 கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது வென்யூ

ஹூண்டாய் நிறுவனத்தின் புது காரான வென்யூ மிக சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு மாதங்களில் 50,000 முன்பதிவுகளை பெற்றிருப்பதே வென்யூ காருக்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கான சான்று. இதன் மூலம் இந்தியாவின் எஸ்யூவி மார்கெட்டில் 21 சதவிகிதம் ஹூண்டாய் வசமானது.

எஸ்யூவி பிரிவில் ஜூன் 2019 யில் விற்பனையான கார்களில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது ஹூண்டாய் வென்யூ. முதல் இடத்தில் இருக்கும் மாருதி சூசுகி விட்டாரா பிரிஸா காருக்கும் வென்யூ காருக்கு இடையேயான வித்தியாசம் 108 மட்டுமே ஆகும். அதே நேரம் மூன்றாம் இடத்தில் இருக்கும் மஹிந்திரா XUV300 யை விட 3,994 கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது ஹூண்டாய் வென்யூ.

இது குறித்து ஹூண்டாய் மோட்டர்ஸ் இந்தியா லிமிடெட் தேசிய விற்பனை தலைவர் விகாஸ் ஜெயின் கூறுகையில், ‘புது தொழிற்நுட்பம், பாதுகாப்பு, இடம் எதிர்பார்பவர்களிடம் இந்த கார் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இரண்டு மாதங்களில் 50,000 முன்பதிவுகள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது. இதுவரை விற்பனையான வென்யூ கார்களில் 55 சதவிகிதமானது நீல லிங்க் எனபில்ட் வகையாகும்' என்றார்.

0 Comments

1.0 பெட்ரோலை தவிர 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் வகையும் உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோலில் 5 ஸ்பீட் மானுவல் கியர்பாக்ஸும் டீசலில் 6 ஸ்பீட் கியர்பாக்ஸும் உள்ளது. இந்த காரில் Esim வசதி உள்ளது. இதற்காக வோடபோன் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது ஹூண்டாய். மே 21 அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் இதுவரை 18,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.