பெணிலி டிஆர்கே 502 பைக் இந்தியாவில் அறிமுகம்... விவரங்கள் உள்ளே!

பெணிலி டிஆர்கே 502 பைக் 500 சிசி டிவின் லிக்விட் கூல்டு இன்ஜின் பெற்றுள்ளது

View Photos
இந்த பைக்கின் விலை ஐந்து இலட்ச ரூபாயாகும்

Highlights

  • இரண்டு மாடல்களில் பெணிலி பைக் வருகிறது
  • இதன் விலை ஐந்து இலட்சமாகும்
  • 500 சிசி இன்ஜின் உடன் இது வருகிறது

சூப்பர் பைக் தயாரிப்பில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று பெணிலி ஆகும். இந்த பெணிலி நிறுவனம், தற்போது இந்தியாவில் புது பைக்கை அறிமுகம் செய்துள்ளது. பெணிலி டிஆர்கே 502 என பெயரிடப்பட்டுள்ள இந்த பைக்கின் விலை ஐந்து இலட்ச ரூபாயாகும்.

ghd7mnd8

பைக்

இந்த பைக்கின் டிசைன் புதுமைகள் நிறைந்ததாக உள்ளது. இந்த பைக்கின் உயரம் 1450 மி.மீ ஆகும். இரட்டை ஹேட்லாம்ப், எல்.இ.டி இண்டிகெட்டர், டெயில் லைட், 20 லிட்டர் எரிபொருள் டாங்க் உடன் இந்த பெணிலி டிஆர்கே 502 வருகிறது.

dsk benelli trk 502

மூன்று வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கிறது

மெக்கானிக்கலாக, பெணிலி டிஆர்கே 502 பைக், 500 சிசி டிவின் லிக்விட் கூல்டு இன்ஜின் பெற்றுள்ளது. இது, 8500 rpm யில் 47 bhp பவர், 6000 rpm யில் 46 Nm டார்க் பெற்றுள்ளது. 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் இந்த பைக்கில் உள்ளது. இதன் சக்கரம் 17 இன்ச் அலாய் சக்கரமாகும்.

0 Comments

இந்த பெணிலி டிஆர்கே 502 பைக் முன்று வண்ணங்களில் வருகின்றன. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், கவாசகி வெர்சிஸ் முதலிய பைக்குகளுக்கு போட்டியாக இந்த பைக்கை பெணிலி அறிமுகம் செய்துள்ளது.   

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Benelli Imperiale 400 with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.