அடுத்த மாதத்திலிருந்து டாடா கார்கள் ரூ. 25 ஆயிரம் வரை உயர்கிறது!!

மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சர்வதேச பொருளாதார பிரச்னை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

View Photos
ஏப்ரல் 2019-ல் இருந்து மாற்ற அமைக்கப்பட்ட விலை நடைமுறைக்கு வருகிறது.

கார்களின் விலையை ரூ. 25 ஆயிரம் வரை உயர்த்துவதற்கு டாடா கார்ஸ் முடிவு செய்துள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட புதிய விலை அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 

காரை உருவாக்குவதற்கான மூலப்பொருட்களுக்கு ஆகும் செலவு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள டாடா நிறுவனம், சர்வதேச பொருளாதார விவகாரங்களை கருத்தில் கொண்டும் விலை உயர்வை கொண்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது. 

விலை உயர்வை டாடா கார்ஸ் கொண்டு வருவது என்பது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஜனவரி மாதத்தின்போது விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது ரூ. 40 ஆயிரம் வரைக்கும் டாடா கார்ஸ் விலை உயர்வு செய்தது. 

இதுகுறித்து டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவின் தலைவர் மயாங்க் பரீக் கூறியதாவது-

மார்க்கெட் நிலைமை மாறிவிட்டது. கார்களை தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பொருளாதார நிலைமைகளும் நாங்கள் விலை உயர்வை ஏற்படுத்த முக்கிய காரணம். 

எங்களின் டியாகோ, ஹெக்ஸா, டிகோர், ஹேரியர், நெக்ஸன் ஆகிய கார் வகைகள் நல்ல முறையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வு விற்பனையை பாதிக்காது என்று நம்புகிறோம். 

0 Comments

இவ்வாறு அவர் கூறினார். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.