Auto Expo 2020: Renault Duster-ன் புதிய 1.3 லிட்டர் டர்போ - பெட்ரோல் வகையின் சிறப்புகள் என்ன?

இந்த புதிய டஸ்டர் எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்து இப்போதைக்குத் தகவல் இல்லை

View Photos
2020 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் மார்க்கெட்டில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Highlights

  • டஸ்டருக்கு புதியதாக 1.3- லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கிடைக்க உள்ளது
  • இந்த புதிய இன்ஜின் மூலம் அதிக பவரூட்டப்பட்டுள்ளது
  • இந்த புதிய இன்ஜின் பழைய இன்ஜின்களுக்கு பதிலாக வரவுள்ளது

ரெனால்ட் நிறுவனம், இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில், டஸ்டர் காருக்கான 2 டர்போ இன்ஜின்களை அறிமுகம் செய்கிறது என்கிற தகவல் ஆச்சரியப்படுத்தியது. 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் இன்ஜின்கள் இனி டர்போ சார்ஜுடன் சேர்ந்து வரவுள்ளன. மேலும் 1.3 லிட்டர் வெர்ஷன், பிஎஸ்6 அம்சத்தைப் பெற்றிருக்கும் என்றும் ரெனால்ட் தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர்தான் டஸ்டர், ஒரு முக்கிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டைப் பெற்றது.

இந்த புதிய டர்போ சார்ஜுடு இன்ஜின் மூலம் 153 பிஎச்பி, 250 Nm பவர் கிடைக்கும். இதனால், முன்பைவிட இன்ஜினின் பவர் 48 பிஎச்பி-யும், டார்க்கின் பவர் 108 Nm-ம் அதிகரித்துள்ளது. இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் முறையிலும் வரும். இதன் மூலம், தற்போது நடைமுறையில் இருக்கும் டஸ்டர் காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இனிமேல் தயாரிக்கடாது எனத் தெரிகிறது. 

Renault Duster

9.15 Lakh * On Road Price (New Delhi)
Renault Duster

59itialg

Renault Duster-க்கு இனி 1.3 லிட்டர் கொண்ட புதிய இன்ஜின் பொருத்தப்படும். 

தோற்றத்தைப் பொறுத்தவரை டஸ்டர் காரில் பெரிதாக எந்த மாற்றங்களையும் பார்க்க முடியவில்லை. சமீபத்தில்தான் அதற்கு ஃபேஸ்லிஃப்ட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

sb2r3c5o

முன்பைவிட இன்ஜினின் பவர் 48 பிஎச்பி-யும், டார்க்கின் பவர் 108 Nm-ம் அதிகரித்துள்ளது

0 Comments

இந்த புதிய டஸ்டர் எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்து இப்போதைக்குத் தகவல் இல்லை. ஆனால், 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் மார்க்கெட்டில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

mp8n33s4

காரின் உட்புறம் மற்றும் அம்சங்களில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Renault Duster with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.