Auto Crisis: கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு வாகன விற்பனையில் கடும் சரிவு!

மந்தநிலையில் உள்ள இந்திய ஆட்டோமொபைல் துறை மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆக.2018 உடன் ஒப்பிடும்போது, 2019 ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை 41 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

View Photos
கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு வாகன விற்பனையில் கடும் சரிவு!

Highlights

  • பயணிகள் கார் விற்பனை 41.09 சதவீதம் குறைந்துள்ளது.
  • இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் 31.57 சதவீதம் குறைந்துள்ளது.
  • பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 2.2 சதவீதம் குறைந்துள்ளது

இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த இரண்டு தசாப்தங்களாக இல்லாத அளவிற்கு ஒவ்வொரு மாதமும் விற்பனையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக வாகன விற்பனை சரிவை சந்தித்து வரும் நிலையில், கடந்த ஆக.2018 உடன் ஒப்பிடும்போது, 2019 ஆகஸ்ட் மாதத்தில் வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. அதாவது, கடந்த 1997-98 முதல் இல்லாத அளவிலான மிக மோசமான சரிவைக் கண்டுள்ளது. 

இரு சக்கர வாகனங்களின் விற்பனை சதவீதமும் மூன்று ஆண்டுகளாக குறைந்த நிலையில் உள்ளது. ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதம் 31.57 சதவீதம் குறைந்து 196,524 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் 2018ல் 287,198 ஆக இருந்தது. 

பயணிகள் கார் விற்பனையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் 2018 உடன் ஒப்பிடும் போது, அப்போது 196,847 யூனிட்டுகள் விற்பனையானது. ஆனால், தற்போது 41.09 சதவீதம் குறைந்து 115,957 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. 

பயன்பாட்டு வாகனங்களின் விற்பனையை பொறுத்தவரையில் வெறும் 2.2 சதவீதம் மட்டுமே சரிவைக் கண்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்ட 73,085 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆகஸ்ட் மாதம் 71,478 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது.

மறுபுறம் வேன் பிரிவு மீண்டும் 47.36 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. ஆகஸ்ட் 2018ல் விற்கப்பட்ட 17,266 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட் 2019ல் 9,089 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. 

இரு சக்கர வாகன விற்பனையும் ஆகஸ்ட் 2018ல் விற்கப்பட்ட 1,947,304 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட் 2019ல் 1,514,196 யூனிட்டுகளுடன் 22.24 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மொபெட்கள் முறையே 22 சதவீதம், 22 சதவீதம் மற்றும் 21 சதவீதம் சரிவைக் கண்டுள்ளன. 

நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் 54.3 சதவீதம் சரிவைக் கண்டுள்ளன. இது கடந்த ஆகஸ்ட் 2018ல் விற்கப்பட்ட 34,073 யூனிட்களுடன் ஒப்பிடும்போது. 2019ல் 15,573 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. 

இலகுவான வணிக வாகனங்களும் 28.21 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. ஆகஸ்ட் 2018-ஐ ஒப்பிடும்போது 50,595 யூனிட்டுகள் விற்கப்பட்ட நிலையில், தற்போது 36,324 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. 

0 Comments

மொத்தத்தில், இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த ஆகஸ்ட் 2018ல் விற்கப்பட்ட 11,570,401 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, 2019 ஆகஸ்ட் மாதத்தில் 9,732,040 யூனிட் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 15.89 சதவீதம் சரிவாகும். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.