சென்னையில் அறிமுகம் ஆகும் ஏதேர் எனர்ஜி..!!!

இன்னும் இரண்டு ஆண்டுகளில் 30 நகரங்களில் அறிமுகம் ஆகும் திட்டம் வைத்துள்ளது ஏதேர் எனர்ஜி.

View Photos
ஏதேர் எனர்ஜி நிறுவனத்தின் இரண்டு தயாரிப்புகள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது

2018 –யில் பெங்களூரில் ஏதேர் எனர்ஜி அறிமுகம் ஆனது. அதனை தொடர்ந்து ஜூன் 2019 –யில் சென்னையில் அறிமுகமாகவுள்ளது ஏதேர் எனர்ஜி. இன்னும் இரண்டு ஆண்டுகளில் 30 நகரங்களில் அறிமுகம் ஆகும் திட்டம் வைத்துள்ளது ஏதேர் எனர்ஜி.

ather 450

ஏதேர் 450 யின் விலை 1.13 லட்சம் ரூபாயாகும்

ஏதேர் எனர்ஜியின் இரு தயாரிப்புகளான 450 மற்றும் 340 பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவே சென்னையிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவைகளுக்கு சார்ஜ் ஏற்ற காபே, மால்கள், ஜீப் முதலியவற்றில் ஏதேர் கிரிட் அமைக்கப்படவுள்ளது.

முதல் ஆறு மாதங்களுக்கு அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஏதேர் பாய்ண்ட்களில் இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என ஏதேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏதேர் கிரிட் ஆப் மூலம் இந்த ஏதேர் பாய்ண்ட்களை அறிந்து கொள்ளலாம்.

at5qe8io

6 மாதங்களுக்கு அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் இலவசமாக சார்ஜ் செய்யலாம் 

0 Comments

பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்ட ஏதேர் நல்ல வரவேற்பை பெற்றது. பெங்களூரில் செப்டம்பர் 2019 வரை ஏதேர் 450 பங்குகள் விற்பனை ஆகி விட்டது. ‘பிரி ஆடர் விருப்பம்' அறிமுகம் செய்துள்ள ஏதேர் நிறுவனம், அதன் மூலம் டெஸ்ட் டிரைவுகளை அளிக்கிறது.  (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.