Ashok Leyland: Q2 யில் 93 சதவிகிதம் வீழ்ச்சியை பதிவு செய்த அசோக் லேலண்ட்

நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் அசோக் லேலண்டின் லாபம் 72 சதவீதம் குறைந்து 269 கோடி ரூபாயாக இருந்தது.

View Photos
Ashok Leyland: அரை ஆண்டு பிபிடி 465 கோடி ரூபாயாக இருந்தது

Highlights

  • 93 சதவீதம் சரிவு பதிவாகியுள்ளது
  • EBIDTA 5.8 சதவீதமாக இருந்தது.
  • வருவாய் 48 சதவீதம் குறைந்து 3929 கோடி கோடி ரூபாயாக இருந்தது

அசோக் லேலண்ட் கடந்த ஆண்டின் FY யின் இரண்டாம் காலாண்டு காலகட்டத்தில் 528 கோடி ரூபாய் லாபம் பதிவு செய்தது. அதுவே இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 39 கோடி ரூபாயாக உள்ளது. இதனை ஒப்பிடும் போது  93 சதவீதம் சரிவு பதிவாகியுள்ளது. இதே காலாண்டில்  EBIDTA 5.8 சதவீதமாக இருந்தது. வருவாய் 48 சதவீதம் குறைந்து 3929 கோடி கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 7621 கோடி ரூபாயாக இருந்தது. வரிக்கு முந்தைய நிறுவனத்தின் லாபம் (பிபிடி)  19.11 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 360.74 கோடி ரூபாயாக இருந்தது. இது 95 சதவீதம் சரிவு. இருப்பினும், அசோக் லேலண்ட் 46.83 கோடி ரூபாய் deferred tax மூலம் ஓரளவிற்கு லாபம் ஈட்டியுள்ளது.

அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் ஜி ஹிந்துஜா கூறுகையில், "ஆட்டோமொபைல் துறை 53 சதவீத அளவுகளில் சரிவைக் கண்டது. அசோக் லேலண்டிற்கான தொகுதிகளும் இந்த காலாண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டன. இருந்தபோதிலும் நாங்கள் 5.8 என்ற EBIDTA அடைய முடிந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட சில செலவு மேலாண்மை திட்டங்கள் பலன்களைக் கொடுத்தன. அவை முடிவுகளில் பிரதிபலிக்கின்றன. எங்கள் முழு அளவிலான ஹெவி டியூட்டி பிஎஸ் VI வாகனங்களுக்கு ARAl சான்றிதழைப் பெற்ற முதல் இந்திய வணிக வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையைப் பெறுகிறோம். "

0 Comments

நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் அசோக் லேலண்டின் லாபம் 72 சதவீதம் குறைந்து  269 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் EBIDTA இந்த காலகட்டத்தில் 8 சதவீதமாக இருந்தது. அதன் வருவாய் 31 சதவீதம் குறைந்து 9613 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 13,884 கோடி ரூபாயாக இருந்தது. அரை ஆண்டு பிபிடி 465 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1246 கோடி ரூபாயாக இருந்தது. இது 63 சதவீத சரிவு.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.