2020 ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் காரின் விவரங்கள் வெளியாகின...!

இந்தியாவில் இந்த கார் ஆகஸ்ட் 20, 2019 யில் அறிமுகம் செய்யப்படவுள்ளது

View Photos

ஹூண்டாய் நிறுவனம் தங்களது புது காரின் பெயரை சமீபத்தில் அறிவித்தது. புது ஜெனரேசன் கிராண்ட் i10 காரான இதற்கு கிராண்ட் i10 நியோஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கார் ஆகஸ்ட் 20, 2019 யில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இந்த காரின் விவரங்களையை வெளியிட்டுள்ளது ஹூண்டாய்.

ஐரோப்பா மார்கெட் முன்பாக இந்தியாவில் தான் இந்த கார் முதலில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சர்வதேச மார்கெட்டில் i10 என்றும் இந்தியா மார்கெட்டில் கிராண்ட் i10 நியோஸ் எனவும் இந்த கார் அழைக்கப்படவுள்ளது. இந்த காரின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. முன்பதிவிற்கான தொகை 11,000 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.

gssdj4h4

ஹூண்டாயின் இந்த காரில் டிசைன் மாற்றங்கள் உள்ளன

மெக்கானிக்கலாக பெட்ரோல் மற்றும் டீசல் வகையில் வரும் இந்த காரில் 10 வகைகள் உள்ளன. பெட்ரோலில் ஏழு வகையும் டீசலில் மூன்று வகைகளும் கிடைக்கவுள்ளன. பெட்ரோல் வகை கார் தான் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என எண்ணி பெட்ரோல் வகையில் ஏழு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது ஹூண்டாய்.

1.2 லிட்டர் கப்பா பெட்ரோல், 1,2 லிட்டர் CRDi டீசல் ஆகியவை இந்த காரில் உள்ளது. இந்த கார் BS6 க்கு ஏற்றது போல் இருக்கும் என எண்ணப்படுகிறது. ஐந்து ஸ்பிட் மானுவல் பெற்றுள்ள இந்த காரில் AMT வசதியும் கிடைக்கும். ஆறு வண்ணத்தில் இந்த கார் கிடைக்க உள்ளது.

s5r7q09o

இந்த கார் 10 வகைகளில் வருகிறது

இந்த புது காரில் ஹூண்டாயின் பிரத்யேக ‘காஸ்கேடிங் கிரில்' பொருத்தப்பட்டுள்ளது. உப்புறம் அதிக இடமுள்ளது. காபினில் பிளாக் மற்றும் பீஜ் உள்ளது. ஏபிஎஸ், இரண்டு ஏர்பேக், ஆட்டோமெடிக் கிளைமேட் கண்ட்ரோல் முதலியனவை இந்த காரில் உள்ளது. அது இந்த காருக்கு ஓர் ஸ்போட்ஸ் லுக் தருகிறது. வென்யூ தயாரிக்கப்பட்ட அதே பிளாட்பார்மில் தான் இந்த காரும் தயாரிக்கப்படுகிறது.

0 Comments

இந்த காரின் ந்ந்னைய விவரங்களான விலை, பெர்பார்மண்ஸ் முதலியனவை ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிவிக்கப்படும். மாருதி சூசுகி ஸ்விப்ட், போர்ட் பிகோ, நிசான் மிக்ரா, போலோ முதலிய கார்களுடன் இந்த கார் போட்டியிடும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.