பைக் பொம்மை மட்டுமில்லை இனி உண்மையான பைக் கூட அமேசானில் கிடைக்கும்...!

ரெபல் ரெட் மற்றும் காஸ்மெடிக் பிளாக் ஆகிய வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கும்

View Photos
இந்த மாதம் இந்த பைக் விற்பனைக்கு வரலாம்

Highlights

  • முதல் AI திறன் உடைய மோட்டர்சைக்கிள் தான் RV 400
  • ஜூலை 5 முதல் ரூபாய் 1000 கொடுத்து அமேசான் இணையதளத்தில் முன்பதவு செய்யலாம்
  • RV 400 பைக்கிற்கு 2000 முன்பதிவுகள் வந்துள்ளது

இந்தியாவின் முதல் AI திறன் உடைய மோட்டர்சைக்கிள் என அறிமுகம் செய்யப்பட்ட பைக் தான் ரிவால்ட் நிறுவனத்தின் RV 400. ஜூன் 18 அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் மோட்டர்சைக்கிளின் முன்பதிவானது revoltmotors.com யில் துவங்கியுள்ளது. வரும் ஜூலை 5 முதல் இந்த பைக்கை ரூபாய் 1000 கொடுத்து அமேசான் இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம். இதுவரை RV 400 பைக்கிற்கு 2000 முன்பதிவுகள் வந்துள்ளதாக ரிவால்ட் இண்டெலிகார்ப் தெரிவித்துள்ளது.

‘இணையதளத்தில் பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து வெற்றி பெறும் முயற்சியில் தான் RV 400 பைக்கின் முன்பதிவை அமேசான் இணையதளத்தில் அறிமுகம் செய்துள்ளோம். இளைஞர்களிடம் இந்த பைக்கின் தோற்றம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பைக்கை டெலிவரி செய்யும் தினமானது மிகவும் முக்கியமானதாகும்' என்றார் ரிவால்ட் இண்டெலிகார்ப் பிரைவேட் லிமிடெட்யின் மார்கெட்டிங் மற்றும் பிசினஸ் டெவலப்மெண்ட் ஆபிஸர் சுபோதீப் பால்.

8lj6c2eg

RV 400 பைக்கிற்கு 2000 முன்பதிவுகள் வந்துள்ளது

இது குறித்து அமேசான் இந்தியாவின் பிரிவு இயக்குநர் ஷாலினி புச்சலபள்ளி கூறுகையில், ‘Amazon.in மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு RV 400 பைக்கினை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது மூலம் மேலும் பல புது டெக்னாலஜிகளை மக்களுக்கு அளிக்க முடியும்' என்றார்.

4ado8r8c

லை 5 முதல் இந்த பைக்கை ரூபாய் 1000 கொடுத்து அமேசான் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

0 Comments

RV 400 பைக்கானது இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். ரெபல் ரெட் மற்றும் காஸ்மெடிக் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். RV 400 பைக்கின் மெக்கானிக்கல் மற்றும் டெக்னிக்கல் விவரங்கானது அந்த பைக் வெளிவந்த பிறகே தெரியும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.