BS 6 க்கு மாற்றப்பட்ட பைக்குகளை யமஹா எப்போது அறிமுகம் செய்கிறது தெரியுமா...?

யமஹாவின் பைக்குகள் நவம்பர் மாதம் முதல் BS 6 கட்டுபாடுகள் உடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

View Photos
விலை ஏற்றம் எவ்வளவு இருக்கும் என தெரிவிக்கப்படவில்லை

ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு பைக்குகளுக்கு BS 6 கட்டுபாடுகள் அமலுக்கு வரவுள்ளன. இதனால் அனைத்து நிறுவனங்களும் தங்களது பைக்குகளை இந்த கட்டுபாடுகளுக்கு ஏற்ப மாற்றவுள்ளது. முன்னணி பைக் நிறுவனமான யமஹாவின் பைக்குகள் நவம்பர் மாதம் முதல் BS 6 கட்டுபாடுகள் உடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யமஹா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் ஜனவரி 2020 முதல் BS 6 கட்டுபாடுகள் ஏற்ப மாற்றப்படுகிறது.

இதனால் யமஹா நிறுவனத்தின் பைக்குகள் 10 முதல் 15 சதவிகிதம் வரை விலை உயர உள்ளது. எந்த யமஹா பைக் முதலில் BS 6 கட்டுபாடுகள் பெறுகிறது என தெரியவிக்கப்படவில்லை.

278a55k4

யமஹா R15 V3.0 பைக்கானது BS6 க்கு ஏற்ப மாற்றப்படவுள்ளது

ஸ்டாண்ட் (Stand) எடுக்காமல் பைக் இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத மாதிரி தொழிற்நுட்பத்தையும் பல பைக்குகளில் அறிமுகம் செய்யவுள்ளது யமஹா. மேலும் புது கிராபிக்ஸ், வண்ணம் இந்த பைக்குகளில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் FZS V3.0 பைக்கை அறிமுகம் செய்தது யமஹா. அதன்பின் R15 V3.0, FZ 25, Fazer 25 ஆகிய பைக்குகளின் ஏபிஎஸ் மாடலை அறிமுகம் செய்தது யமஹா. அதனை தொடர்ந்து மார்ச் மாதம் MT-15 பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

0 Comments

இந்தியாவில் BS 6 சான்றிதழ் பெற்ற முதல் பைக் நிறுவனம் ஹீரோ மோட்டர்கார்ப் ஆகும். ஹீரோ மோட்டர்கார்ப்யின் பைக்கான ஹீரோ Splendor iSmart பைக்குதான் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 125 தான் அவர்களது நிறுவனத்தின் முதல் BS 6 மாடல் பைக் எனவும் அது செப்டம்பர் 2019 முதல் அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Ducati நிறுவனமானது BS 6 பைக்குகளை 2020 யின் துவக்கத்தில் தான் அறிமுகம் செய்வோம் என உறுதி செய்துள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.