New Cars and Bikes in India

7,200 ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட் கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன

இந்த காரின் பவர் டிரெய்ன் கன்ட்ரோல் மாடியூலில் உள்ள மென் பொருளை சோதனை செய்யவும், அப்டேட் செய்யவுமே கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன

View Photos

7,200 ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட் பெட்ரோல் இன்ஜின் கார்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பெட்ரோல் இன்ஜின் மாடல் மட்டுமே திரும்பப் பெறப்படுகிறது. இந்த கார்கள் அனைத்தும் 2017 -2018 ஆண்டு காலத்தில் தயாரிக்கப்பட்டவை. இந்த காரின் பவர் டிரெய்ன் கன்ட்ரோல் மாடியூலில் உள்ள மென் பொருளை சோதனை செய்யவும், அப்டேட் செய்யவுமே கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன. எங்களுக்கு கிடைத்த தகவல் படி, இந்த மென்பொருள் பிரச்சனையால், தீடீரென பேட்டரி டிரெய்ன் ஆவதாக புகார் எழுந்துள்ளது. அதை சரி செய்யவே இந்த நடவடிக்கை.

மேற் சொன்ன மாதங்களில் தயாரான ஈக்கோ ஸ்போர்ட் சப்காம்பேக்ட் எஸ்.யூ.வியை வாங்கிய, வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அல்லது இ-மெயில் மூலம் தகவல் கொடுக்கப்படும் என்று, ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் காரும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள, ஃபோர்டு இணையதளத்தில் field service action என்ற பகுதியில், காரின் ஐடி எண்ணை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த மென்பொருள் அப்டேட் இலவசமாக செய்து தரப்படுகிறதா, என்பதை ஃபோர்டு உறுதி படுத்தவில்லை. ஆனால், அந்நிறுவனம் இதற்கு முன் திரும்ப பெற்ற கார்களுக்கு இலவசமாகவே சேவை கொடுத்துள்ளது. எனவே இதுவும் இலவச சேவையாகத் தான் இருக்க வேண்டும்.

0 Comments

ஈக்கோ ஸ்போர்ட் கார் திருமபப் பெறப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த ஜூலை மாதம், 4,379 கார்களை திரும்பப் பெற்றது. மே முதல் ஜூன் 2017-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்களில், முன்பகுதியில் உள்ள கன்ட்ரோல் ஆர்மில், வெல்டிங் தரத்தை உறுதிபடுத்துவதற்காக அந்த கார்கள் திருமபப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.