New Cars and Bikes in India

சாலை விபத்துகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்

ஆட்டோமேட்டிக் எமர்ஜன்சி பிரேக்கிங் (AEB) அனைத்து வாகங்களிலும் கட்டாயம் ஆக்கப்படவுள்ளது

View Photos

சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பல பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, வாகனங்களில் ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம் வரவுள்ளது. ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட 40 நாடுகள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஆட்டோமேட்டிக் எமர்ஜன்சி பிரேக்கிங் (AEB) அனைத்து வாகனங்களிலும் கட்டாயம் ஆக்கப்படவுள்ளது. இதில், சென்சார் மூலம் மற்ற வாகனங்களில் மோதாமல் விபத்துகள் தடுக்கப்படும்.

முதல்முறையாக ஜப்பானில் அடுத்த வருடம் இது செயல்பாட்டுக்கு வரவுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இது 2022 -ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்.

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

கடந்த ஆண்டு ஐரோப்பிய யூனியனில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9500 ஆகும். இந்த புதிய AEB கட்டாயம் ஆக்குவதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 1000 சாலை விபத்துகளை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.