11 மாதத்தில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை! பெரும் வரவேற்பில் ஹோண்டா அமேஸ்!!

செகண்ட் ஜெனரேஷன் ஹோண்டா அமேஸ் கார்கள் கடந்த மே 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது 11 மாதங்களை கடந்திருக்கிறது இந்த கார்.

View Photos
11 மாதத்தில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை! பெரும் வரவேற்பில் ஹோண்டா அமேஸ்!!

அறிமுகம் செய்யப்பட்டு 11 மாதங்களில் 85 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகி ஹோண்டா அமேஸ் சாதனை படைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் அதீத வரவேற்புதான் இந்த விற்பனைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 

ஜப்பான் நிறுவனமான ஹோண்டாவின் செகண்ட் ஜெனரேஷன் அமேஸ் கார்கள் கடந்த ஆண்டு மே மாதத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் விற்பனையாகும் ஹோண்டா கார்களில் அமேஸ் தான் அதிகம் விற்பனையாகும் வாகனமாக இருந்து வருகிறது. 

நிதியாண்டு 2018-19-ல் மட்டும் விற்பனையான ஹோண்டா கார்களில் 46 சதவீதம் அமேஸ் ஆகும். முதல் தலைமுறை அமேஸ் கார்கள் கடந்த ஏப்ரல் 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது வரையில் இந்தியாவில் மட்டும் முதல் தலைமுறை அமேஸ் கார்கள் 3.4 லட்சம் அளவுக்கு விற்பனையாகி உள்ளது. 

new honda amaze

The Honda Amaze has been updated with new safety features too, to meet new regulations

2008-ல் அமேஸ் கார்கள் முதன் முதலில் அறிமுகம்  செய்யப்பட்டன. அவற்றின் டிசைன்களில் சிறிது மாற்றம்  கொண்டு வரப்பட்டு முதல் தலைமுறை அமேஸ் கார்கள் சந்தைப்படுத்தப்பட்டன. உள் அமைப்பை பொருத்தளவில் விசாலமான இட வசதி, ஸ்போர்ட்டிங் லுக், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், மல்ட்டி ஃபங்ஷன் ஸ்டீரிங் வீல், டச் ஸ்க்ரீன் இன்ஃபோ டெய்ன்மென்ட் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள். 

டெல்லி ஷோ ரூம்களில் அமேஸ் கார்களின் அறிமுக விலை ரூ. 8.56 லட்சமாக உள்ளது. மாருதி சுசுகி டிசைர், ஃபோக்ஸ்வேகன் அமேயோ, ஹூண்டாய் சென்ட், டாடா டைகோர், ஃபோர்டு ஆஸ்பைர் ஆகியவற்றுக்கு போட்டி கொடுக்கும் வகையில் அமேஸ் செகண்ட் ஜெனரேஷன் உள்ளது. 

0 Comments

மாருதி சுசுகி டிசைரை பொருத்தளவில் மாதந்தோறும் 15 ஆயிரம் கார்கள் விற்பனையாகின்றன. அமேஸின் மாத விற்பனை சராசரியாக 6 ஆயிரம் யூனிட்டுகளாக உள்ளது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.