BS 6 க்கு அப்டேட் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்ட் பைக்கின் புகைப்படங்கள் வெளியாகின...!

350 சிசி, 500 சிசி வகை பைக்குகளில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மாற்றம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

View Photos
சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்ட் Continental GT 650 பைக் சென்னையில் காணப்பட்டது

Highlights

  • BS 6 க்கு ஏற்ப அனைத்து பைக்குகள் ஏப்ரல் 1,2020 க்குள் அப்டேட் செய்யபடும்
  • 649 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்ட் இன்ஜின் பெற்றுள்ளது இந்த பைக்
  • ECU மற்றும் ட்ராட்டிலில் சிறு மாற்றம் எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் கார், பைக்குகளுக்கான புது கட்டுபாடுகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. இதனையடுத்து அனைத்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை புது கட்டுபாடுகளுக்கு ஏற்ப அப்டேட் செய்துவருகிறது. இதில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் அடங்கும்.

BS 6 க்கு ஏற்ப தங்களது பைக்குகளை அப்டேட் செய்து வருகிறது ராயல் என்ஃபீல்ட். BS 6 க்கு ஏற்ப அனைத்து பைக்குகளும் ஏப்ரல் 1,2020 க்குள் அப்டேட் செய்யப்பட வேண்டும். சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்ட் Continental GT 650 பைக் சென்னையில் காணப்பட்டது.

bsa4hkl4

இந்த பைக்கில் பெரிய டிசைன் மாற்றங்கள் இல்லை

தற்போது இருக்கும் பைக்கை போன்றே இந்த அப்டேட் செய்யப்பட்ட பைக்கும் இருக்கிறது. எவ்வித டிசைன் மாற்றமும் காணப்படவில்லை. எக்ஸ்ஹாஸ்ட் (Exhaust) மட்டுமே சிறு மாற்றம் இருக்கிறது. ஆனால் இது அறிமுகம் செய்யப்படும் அப்டேட் பைக்கில் இருக்குமா என்பது தெரியவில்லை.

மெக்கானிக்கலாக 649 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்ட் இன்ஜின் பெற்றுள்ள இந்த பைக், 7250 rpm யில் 47 bhp பவரையும் 5250 rpm யில் 52 Nm உட்ச டார்க்கையும் வெளியிடுகிறது. 6 ஸ்பிட் கியர் பாக்ஸ் பெற்றுள்ள இந்த பைக் 160 கிலோமீட்டர் ஸ்பீடு வரை செல்லும் திறன் பெற்றது.  BS 6 க்கு ஏற்ப மாற்றப்படும் இந்த பைக்கின் ECU மற்றும் ட்ராட்டிலில் சிறு மாற்றம் எதிர்பார்க்கலாம்.

350 சிசி, 500 சிசி வகை பைக்குகளில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மாற்றம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாசிக் மற்றும் தண்டர்பேர்ட் மாடல் பைக்குகளின் இன்ஜின், செசிஸ், டிசைன் மாற்றங்கள் இருக்கும் என்பது சமீபத்தில் வெளியான ஸ்பை புகைப்படங்கள் மூலம் அறியலாம்.

0 Comments

(Source: Rushlane)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.