புது டொயோட்டா கார் இந்தியாவில் அறிமுகம்; விவரம் உள்ளே..!

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா கிரிஸ்டா இதுவரை 2,25,000 கார்கள் விற்றுள்ளது

View Photos
இன்னோவா கிரிஸ்டா கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

Highlights

  • உட்புறத்தில் புது ஐவரி வண்ணம் பெற்றுள்ளது இந்த புது கார்
  • சார்ஜர் மற்றும் கிளாசில் மாற்றம் உள்ளது
  • மெக்கானிக்கலாக இந்த காரில் மாற்றம் இல்லை

டொயோட்டா நிறுவனத்தின் சிறந்த கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா. தற்போது இந்த டொயோட்டா கிரிஸ்டா காரின் அப்டேட் மாடலை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது.

டொயோட்டா இன்னோவா காரின் விலை 14.93 லட்சம் ரூபாயில் இருந்து 22.43 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இன்னோவா டூரிங் ஸ்போர்ட்ஸ் வகை காரின் விலை 18.92 லட்சம் ரூபாயில் இருந்து 23.47 லட்சம் ரூபாய் வரை உள்ளது.

itafhv6gபுது இன்னோவா காரின் உட்புறத்தில் மாற்றங்கள் உள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட இன்னோவா காரின் இருக்கைகள் பெர்போரேட்டத் (Perforated) லெதர் பெற்றுள்ளது. அதிக வெப்பத்தை தடுக்கும் விதமாக புது கிரிஸ்டாவின் கிளாஸ்கள் உள்ளன. விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய USB போர்ட் இந்த அப்டேட் செய்யப்பட்ட காரில் உள்ளது.

மெக்கானிக்கலாக இன்னோவா கிரிஸ்டாவில் மாற்றம் இல்லை. இன்னோவா கிரிஸ்டா மற்றும் டூரிங் ஸ்போர்ட் கார்கள் முறையே 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் நான்கு சிலிண்டர் மோட்டர் பெற்றுள்ளது. 2.4 லிட்டர் இன்ஜின் 144 bhp யை 5200 rpm –யிலும் உட்ச டார்கான 245 Nm யை 4000 rpm –யிலும் பெறுகிறது. 2.8 லிட்டர் இன்ஜின் 171 bhp யை 3400 rpm –யிலும் உட்ச டார்கான 360 Nm யை 1200 rpm முதல் 3400 rpm –யிலும் பெறுகிறது.

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா கிரிஸ்டா இதுவரை 2,25,000 கார்கள் விற்றுள்ளது. மார்கெட்டில் தன் பிரிவில் 40 சதவிகிதம் இன்னோவா கிரிஸ்டா கார் பெற்றுள்ளது.

0 Comments

.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.