புதிய அப்டேட் உடன் வெளிவந்த டாடா ஹெக்ஸா!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘டாடா ஹெக்ஸா’ என்னும் காரை அறிமுகம் செய்தது டாடா நிறுவனம்

View Photos
இதன் விலையில் மாற்றம் இல்லை

டாடா நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘டாடா ஹெக்ஸா' என்னும் காரை அறிமுகம் செய்தது. இப்போது அந்த காரின் அப்டேட் மாடலை டாடா அறிமுகம் செய்துள்ளது.

2.2 லிட்டர் VARICOR டீசல் இன்ஜின் பெற்றுள்ள டாடா ஹெக்ஸா, VARICOR 320 மற்றும்  VARICOR 400 என்னும் இரண்டு வகைகளில் வருகிறது. VARICOR 320 வகை 148 BHP பவரையும் 320 Nm டார்க்கையும் வெளியிடுகிறது. VARICOR 400 வகையானது 154 BHP பவரையும் 400 Nm டார்க்கையும் வெளியிடுகிறது.

Tata Hexa

15.57 Lakh * On Road Price (New Delhi)
Tata Hexa

50lpjo0c

புது அப்டேட்களுடன் ஹெக்ஸா காரை அறிமுகம் செய்துள்ளது டாடா

டெக்னிக்கலாக இரண்டு டோன் ரூப், பல விதமான அலாய் சக்கரம், 7 இன்ச் தொடுதிரை பெற்றுள்ளது டாடா ஹெக்ஸா. 2019 டாடா ஹெக்ஸா காரானது ஐந்து வண்ணங்களில் வருகிறது.

டாடா மோட்டர்ஸ் விற்பனை பிரிவின் துணைத் தலைவர் எஸ்.என்.பர்மன் கூறுகையில், ‘மக்களுக்கு அதி நவீன  காரை அறிமுகம் செய்யும் எங்களின் நோக்கம் என்பதால், 2019 டாடா ஹெக்ஸா காரை புதிய வசதிகளுடன்  நாங்கள் அறிமுகம் செய்வதில் பெருமை அடைகின்றோம். மக்களுக்கு அதி நவீன டெக்னிக்கல் மற்றும் டிசைன் அம்சங்களுடன் கார் வழங்கும் எங்களின் நோக்கத்தை டாடா ஹெக்ஸா செய்யும் என நம்புகிறேன்' என்றார்.

0 Comments

இந்த காரின் மாடலுக்கு ஏற்ப 12.99 லட்சம் ரூபாய் முதல் 18.16 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Tata Hexa with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.