புதிய மாற்றத்துடன், புது வண்ணத்தில் சுசூகியின் பைக்...!!!

இரண்டு புதிய வண்னங்கள் ஜிஎஸ்எக்ஸ் –எஸ் 750 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

View Photos

சுசூகி நிறுவனத்தின் பைக்கான ஜிஎஸ்எக்ஸ் –எஸ் 750 சர்வதேச சந்தையில் சில மாற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கருப்பு / சிகப்பு மற்றும் கருப்பு / நீல ஆகிய நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது. தற்போது இரண்டு புதிய வண்னங்கள் ஜிஎஸ்எக்ஸ் –எஸ் 750 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ih8029v8

இந்தியாவில் இந்த பைக் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும்

நீல நிறத்தில் பச்சை மற்றும் வெள்ளை ஹைலைட் வண்னத்திலும் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் கருப்பு வண்ணத்தில் வருகிறது. இது போக மேட் கருப்பு வண்ணத்தில் சுசூகி ஜிஎஸ்எக்ஸ் –எஸ் 750 பைக் கிடைக்கிறது.

மெக்கானிக்கலாக 749 சிசி நான்கு சிலிண்டர் இன்ஜின் பெற்றுள்ள ஜிஎஸ்எக்ஸ் –எஸ் 750, 113 bhp பவரையும் 81 Nm டார்க் பெற்றுள்ளது. 6 ஸ்பிட் கியர் பெற்றுள்ள இந்த பைக், ஏபிஎஸ் வசதியுடன் வருகிறது.

0 Comments

இந்த ஆண்டின் இறுதியில் புது ஜிஎஸ்எக்ஸ் –எஸ் 750 பைக் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது. கவாசகி Z900, யமஹா எம்டி 09, டுக்காட்டி மான்ஸ்டர் 821 பைக்குகளுக்கு போட்டியாக சூசுகி நிறுவனம் ஜிஎஸ்எக்ஸ் –எஸ் 750 பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.