அட்வென்ச்சர் பிரியர்களுக்கான கவசாகி 1000 சிசி பைக் லான்ச் - விலை ரூ. 10.69 லட்சம்

கவசாகி வெர்சிஸ் பைக் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

View Photos
மார்ச் மாதத்தில் இருந்து டெலிவரி தொடங்குகிறது

Highlights

  • 17 இன்ச் அலாய் வீல்கள், 840 மி.மீ. சீட, ஆன்ட்டி லாக் பிரேக்குகள்
  • 21 லிட்டர் பெட்ரோலை இதில் நிரப்பிக் கொள்ள முடியும்.
  • The Versys 1000 makes around 118 bhp of power and 102 Nm of torque

கவசாகியின் வெர்சிஸ் 1000 சிசி பைக் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டிருக்கிறது. டெல்லி ஷோ ரூம்களில் இதன் விலை ரூ. 10.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல சிறப்பு அம்சங்கள் இதில் இருப்பினும், ஒரேயொரு கலரில் மட்டுமே பைக்கை களத்தில் இறக்கியுள்ளது கவசாகி.

இந்த பைக் மாடல்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்பட்டவை. குறிப்பாக அட்வென்ச்சர் மற்றும் நீண்ட தூர டிராவல் பிரியர்களை குறி வைத்து வெர்சிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 

4 சிலிண்டர் எஞ்சின் இதில் உள்ளன. வெர்சிஸை கடந்த 2018 நவம்பரில் பலர் புக் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு மார்ச் மாதத்தில் இருந்து டெலிவரி தொடங்கி விடும். 

1043 சிசி எஞ்சின் வெர்சிசுக்கு அசுர பலத்தை அளிக்கிறது. திறன்களை பொருத்தளவில் ஆர்.பி.எம். 9000- ஆக உள்ளது. 17 இன்ச் அலாய் வீல்கள், 840 மி.மீ. சீட, ஆன்ட்டி லாக் பிரேக்குகள் உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சங்கள். 

0 Comments

255 கிலோ எடை கொண்டதாக இந்த பைக் உள்ளது. ஒரே நேரத்தில் 21 லிட்டர் பெட்ரோலை இதில் நிரப்பிக் கொள்ள முடியும். டுகாட்டி மல்ட்டி ஸ்ட்ராடா மற்றும் ஹோண்டா ஆப்ரிகா ஆகிய பைக்குகளுக்கு டஃப் தரும் என்று கவசாகி தெரிவித்துள்ளது. 
 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.