புதிய ஹோண்டா சிவிக் காரின் மெக்கானிக்கல் விவரங்கள் வெளியாகின..!

முக்கியமாக இந்த காரில் டீசல் இன்ஜின் உள்ளது

View Photos
இந்த காரில் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் வசதிகள் உள்ளன

ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஹோண்டா சிவிக் கார். இது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தற்போது தனது 10வது ஜெனரேஷன் நிலையில் உள்ளது. இதன் மெக்கானிக்கல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

இந்த புது கார், எல்.இ.டி லாம்ப், ஏரோடைனமிக் ஸ்டைல், புது டிசைன் என பக்காவாக உள்ளது. மேலும் இந்த கார் 4656 மி.மீ. நீளத்தில் உள்ளது.

oht76eso

புது ஹோண்டா சிவிக் காரில் டீசல் இன்ஜின் வசதி உள்ளது

முக்கியமாக இந்த காரில் டீசல் இன்ஜின் உள்ளது. கடந்த காலங்களில் இந்த காரில் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே இருந்தது.

இந்த புது சிவிக் காரில் 1.6 லிட்டர் DOHC i-DTEC டீசல் இன்ஜின் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், 118 bhp மற்றும் 300 Nm டார்க்கை வெளிப்படுத்தும். புதிய டர்போ-சார்ஜர் பெற்றுள்ளதால் இதன் ஆற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதில் 6 கியர் மானுவல் வசதி உள்ளது. ஒரு லிட்டர் டீசலுக்கு இந்த கார் 26.8 கிலோமீட்டர் வரை செல்லும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

5h0iobug

இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் BS 6 கட்டுப்பாடுகளுடன் வருகிறது.

0 Comments

டீசல் இன்ஜின் தவிர இந்த கார் பெட்ரோல் இன்ஜின் வசதியும் பெற்றுள்ளது. 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 174 Nm டார்க்கை வெளிப்படுத்தும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16.5 கிலோமீட்டர் தூரம் செல்லும் இது, BS 6 கட்டுபாடுகளுடன் வருகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.