ஹோண்டாவின் புது பைக்கின் முன்பதிவு...!!

பைக்கின் விலை 8 இலட்ச ரூபாய்க்குக் கீழ் இருக்கும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

View Photos
இந்த பைக்கின் விலை 8 இலட்ச ரூபாய்க்குக் கீழ் இருக்கும் எனத் தகவல்

ஹோண்டா நிறுவனத்தின் புது பைக்கான ‘சிபிஆர் 650ஆர்' பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த பைக்கின் விலை 8 இலட்ச ரூபாய்க்குக் கீழ் இருக்கும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

546hbf8c

ஹோண்டா நிறுவனத்தின் புது பைக் ‘சிபிஆர் 650ஆர்' ஆகும்

15,000 ரூபாய் கொடுத்து இந்த பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து ஹோண்டா விற்பனை பிரிவின் துணைத் தலைவர் யாத்விந்தர் சிங் கூறுகையில், ‘இந்தியாவில் சிபி300ஆர் பைக்கை அறிமுகம் செய்து இரண்டு மாதங்களுக்குள் மற்றொரு பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்வதில் மிகுந்த பெருமை கொள்கிறது. இந்த பைக்கின் முன்பதிவு இப்போது துவங்கியுள்ளது' என்றார்.

3rnn4r34

இதன் முன்பதிவு 15,000 ரூபாயாக உள்ளது

மெக்கானிக்கலாக 649 சிசி ஏர் கூல்டு நான்கு சிலிண்டர் இன்ஜின் உடன் வரும் இது, 12000 rpm யில் 94 bhp பவர் வெளியிடுகிறது. 6 கியர் வசதியுடன் வரும் இதில், ஹாண்டில் பார் 30 மி.மீ நீட்டிக்கப்பட்டுள்ளது.

d5ifon9

இரண்டு வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கும்

0 Comments

டெக்னிக்கலாக இரண்டு எல்.இ.டி ஹெட்லாம்ப், டிஜிட்டல் எல்.சி.டி டிஸ்ப்ளே புதியதாக உள்ளது. இந்த பைக் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. கவாஸகி நிஞ்ஜா 650, டிரைம்ப் ஸ்டிரிட் டிரிப்பிள் எஸ் முதலிய பைக்குகளுக்கு இணையாக இந்த ஹோண்டா சிபிஆர் 650ஆர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.