இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவிருக்கும் டுகாட்டி டியாவெல்!

டுகாட்டி தனது டியாவெல் பைக்கின் 2018 மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது

View Photos

Highlights

  • டுகாட்டி டியாவெல் புதிய மாடல் பைக்கை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது
  • பைக்கின் இந்திய விலை 17.06 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • 1198 சிசியில் இருந்து 1262 சிசியாக இன்ஜின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது

டுகாட்டி தனது டியாவெல் பைக்கின் 2018 மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக்கின் விலை இந்தியாவில் 17.06 லட்ச ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டுகாட்டியின் க்ரூஸர் மற்றும் ஸ்போர்ட் பைக்கின் வடிவான டியாவெல் கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பைக்கின் புதிய மாடல் வெளி வர உள்ளது.

Ducati Diavel

17.06 Lakh * On Road Price (New Delhi)
Ducati Diavel

bsm1uh7k

இந்த புதிய பைக் கடந்த சில தினங்களுக்கு முன் ஐரோப்பாவில் ஸ்பாட் செய்யப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புதிய மாடல் பைக்கில் 1262 சிசி இன்ஜின் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல் 1198 சிசி இன்ஜினைக் கொண்டு இருந்தது. புதிய பைக் அதி வேகத்திறன் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும்படி உருவாக்கப்ப்பட்டுள்ளது.

927ou0no
0 Comments

இன்ஜின் மட்டுமில்லாது இந்த புதிய பைக்கின் பிரேம் மற்றும் சஸ்பென்ஷன்களும் மாற்றப்பட்டுள்ளது. ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் வசதிகளோடு கார்னரிங் ஏபிஎஸ், பல ரைடிங் மோடுகளை கொண்டுள்ளதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Ducati Diavel with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.