2019 பஜாஜ் டாமினார் பைக்கின் விவரங்கள் லீக் ஆனது!

புது டாமினாரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் 15,000 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது

View Photos
மார்ச் மாதம் 2019 பஜாஜ் டாமினார் பைக் விற்பனைக்கு வரவுள்ளது

பஜாஜ் நிறுவனத்தின் அடுத்த பைக், 2019 பஜாஜ் டாமினார் ஆகும். இன்னும் சில வாரங்களில் இந்த பைக் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கு முன்பே, இந்த பைக்கின் மெக்கானிக்கல் மற்றும் டெக்னிக்கல் விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

tdtige08

புது 2019 பஜாஜ் டாமினார்  பைக்கின் பவர் உயர்ந்துள்ளது

பழைய டாமினார் பைக்கில் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட் இன்ஜின் இருந்தது. புது டாமினார் பைக்கில் மோட்டரில் மாற்றமில்லை. ஆனால், புது டாமினார் 8650 rpm இல் 39 bhp பவரை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது. தற்போதைய டாமினார் 8000 rpm யில் 35 bhp பவரை வெளியிடுகிறது. புது டாமினார், 6 கியர் வசதியுடன் வருகிறது.

agr77tcc

புது 2019 பஜாஜ் டாமினார் பைக்கின் எடை 2.5 கிலோ உயர்ந்துள்ளது

புது பைக்கில் உள்ள மாற்றங்களால், பைக்கின் எடையும் 2.5 கிலோ உயர்ந்துள்ளது. புது டாமினார் பைக்கின் எடை 184.5 கிலோவாகும். பிரேக் மாடலிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 390 டியூக் பைக்கில் இருக்கும் முன் பிரேக் தான் 2019 டாமினாரிலும் இருக்கிறது.

தற்போதைய டாமினாரின் விலை 1.63 இலட்ச ரூபாயாகும். புது டாமினாரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் 15,000 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது. இது, டாமினாரின் போட்டியாக கருதப்படும் கேடிஎம் டியூக் 250, ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன், ஹோண்டா சிபி300ஆர் ஆகிய பைக்குகளின் விலையை விட குறைவாகும்.

0 Comments

Source: Hyperrider.in

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.