புதிய RSV4 சூப்பர் பைக்கை உருவாக்கி வரும் ஏப்ரிலியா

2019-ம் ஆண்டு மத்தியில் வெளியாக இருக்கும் இந்த பைக் முந்தைய மாடலை விட கூடுதல் பவராக இருக்கும்

View Photos

Highlights

  • புதிய RSV4 220 பி.எச்.பி பவர் கொடுக்கும்
  • 1100 சி.சி என்ஜின் இடம் பெறுகிறது
  • நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும்

ஏப்ரிலியா நிறுவனம் RSV4 பைக்கின் புதிய மாடலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2019-ம் ஆண்டு மத்தியில் வெளியாக இருக்கும் இந்த பைக் முந்தைய மாடலை விட கூடுதல் பவராக இருக்கும் என்றும் தெரிகிறது. சாசிஸும் புதிய மாற்றம் பெறுகிறது.

புதிய என்ஜின் 220 பி.எச்.பி சக்தி கொடுக்கும் திறன் கொண்டதாக இருக்கும். டுக்காட்டியின் பனிகலே வி4 என்ஜினுடன் இந்த புதிய மாடல் போட்டியிடுவதாக இருக்கும்.

Aprilia RSV4

20.78 Lakh * On Road Price (New Delhi)
Aprilia RSV4

தற்போது RSV4யில் உள்ள 1000சிசி என்ஜின், 201 ஹார்ஸ் பவர் மட்டுமே கொடுக்கிறது. அடுத்து வரவுள்ள பைக்கில் 1100 சி.சி வி4 என்ஜின் இடம் பெற இருக்கிறது.

2009-ம் ஆண்டு முதல் சந்தையில் இருக்கும் ஏப்ரிலியா RSV4 பைக்கில் பல மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் முன்னணி சூப்பர் பைக்காகவும் இருக்கிறது. 10 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், முதல் முறையாக பெரிய அளவு மாற்றங்கள் செய்யப்படுகிறது.

aprilia rsv 4 rf le

புதிய அப்டேட்டில், பல எலக்ட்ரானிக் பொருட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிய சாசிஸ் அலுமினியம் ட்வின் ஸ்பாரில் செய்யப்பட உள்ளது. இதனால் பைக்கின் எடை 5-7 கிலோ வரை குறையும்.

0 Comments

இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவுள்ள EICMA நிகழ்ச்சியில் RSV4 அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முழுமையாக உருவாக்கப்பட்ட இறுதி தயாரிப்பு, என்று வெளியிடப்படும் என்று இன்னும் உறுதியான தகவல் இல்லை.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Aprilia RSV4 with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.